தாரா ஏர்லைன்ஸ் விமான விபத்து: இதுவரை 21 உடல்கள் மீட்பு.!
நேபாளத்தின் போகாராவில் இருந்து 2 ஜெர்மனியர்கள், 4 இந்தியர்கள் 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் விமானம் மாயமானது.
இதனைத் தொடர்ந்து, நேபாள ராணுவம் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள தசாங் பகுதியில் உள்ள சனோஸ்வேர்பிர் என்ற இடத்தில் சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு எனவும் 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இன்று காலை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நேபாள காவல்துறையினர் தகவல் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து, தற்போது 21-உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் 1 உடலை தேடும் தேடுதல் பணி நடந்து வருகிறது.