ஈராக்கின் பாக்தாத்தில் டேங்கர் லாரி வெடித்ததில் 10 பேர் பலி

Default Image

கிழக்கு பாக்தாத்தின் குடியிருப்பு பகுதியில் கால்பந்து மைதானம் அருகே எரிவாயு டேங்கர் வெடித்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கால்பந்தாட்ட மைதானம் மற்றும் கஃபே ஆகியவற்றிற்கு அருகிலுள்ள கேரேஜ் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிப்பொருள் ஒன்று வெடித்ததன் காரணமாக அருகில் இருந்த எரிவாயு டேங்கர் ஒன்று வெடித்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

பலியானவர்களில் பெரும்பாலானோர் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read: Somalia Blast: சோமாலியாவில் நடந்த அடுத்தடுத்து நடந்த 2 கார் குண்டுவெடிப்பு -12 பேர் பலி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்