23 ஆண்டு கழித்து குடமுழுக்கு காணும் தஞ்சை…படையெடுக்கும் பக்தர்கள் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Default Image
  • கோலகலம் பூண்டு மக்கள் வெள்ளத்தில் காணப்படும் தஞ்சை பெரியகோவில்
  • 23 ஆண்டுகழித்து இன்று குடமுழுக்கு தஞ்சை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

பழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி அம்மாநகரமே விழாக்கோலம் பூண்டு காட்சி அளிக்கிறது. 23 ஆண்டு கழித்து குடமுழுக்கு நடைபெறுவதால் இந்த விழாவில் கலந்து கொள்ள சுமார் 5 முதல் 7 லட்சம் வரை மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டு உள்ளது.

விழா நடைபெறும் கோயில் மற்றும் கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 275 தண்ணீர் தொட்டிகள் மற்றும் 238 தற்காலிக கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மருத்துவ உதவிக்காக 100 மருத்துவர்கள் அவர்களோடு 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மேலும் 6 மருத்துவக்குழுக்கள் 26 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 28 அவசர சிகச்சை ஊர்திகள் என்று விரிவான நிலையில் தயாராக உள்ளனர்.

தீ விபத்து போன்ற அசம்பவ விதங்களை எதிர்கொள்ள, நவீன வசதியுடைய தீயனைப்பு வாகனம் மற்றும் 5 சாதாரண வாகனங்களோடு, 16 பாம்பு பிடி வீரர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் உள்ளனர். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்ற வாகனங்கள் நிறுத்த 21 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயிலினுள் நடைபெறும் நிகழ்ச்சிகளை வெளியில் இருந்து காணும் வகையில் எல்.ஈ.டி. திரைகளும் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் மக்களின் வசதிக்காக அமைக்கப் பட்டுள்ளது. கோயில் உள் மற்றும் வெளிபகுதியில் ஏற்கனவே பொருத்தியிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களோடு தற்போது கூடுதலாக 8 அதி நவீன வசதிபடைத்த கேமிராக்கள் உள்பட 192 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.மேலும் இதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க தனியாக கட்டுபாட்டு அறையை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் இவ்விழா பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தஞ்சை நகருக்குள் வரும் முக்கிய சாலைகளில் 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனங்கள் சோதனையுன் நடத்தப்பட்டு வருகிறது.தஞ்சையில் குடமுழுக்குக்காக செய்யப்பட்ட இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி மற்றும் காவல் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கோலகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்