குடமுழுக்கு கண்ட பின்னும் தஞ்சையில் குவியும் மக்கள்
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினான். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
23 ஆண்டு கழித்து தற்போது இக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா கடந்த 5ந்தேதி நடைபெற்றது. இதற்காக கடந்த 1ந்தேதி யாகசாலை பூஜையானது தொடங்கி குடமுழுக்கு நடைபெற்ற நாள் வரை 13 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள். குடமுழுக்கு நடைபெற்ற மறுநாளே மண்டலாபிஷேக பூஜை தொடங்கியது.இந்த மண்டலாபிஷேக பூஜை வருகிற 29ந்தேதியன்று நிறைவடைகிறது.