கோலாகல கொண்டாட்டத்துக்கு தயாராகும் பெரிய கோவில்..இன்று யாகசாலை பூஜை..!

Published by
kavitha
  • பழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கொண்டாட்டம் தீவிரம்
  • இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது.

 

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தற்போது நடைபெற உள்ளது.அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 5 ந் தேதி கோலகலமாக  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குடமுழுக்கு பணிகளானது பூர்வாங்க பூஜைகளுடன் ஏற்பாடுகள்  நடைபெற்று வருகிறது.

நேற்று குடமுழுக்கு விழாவில் காவிரி புனிதநீரானது யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குவதை முன்னிட்டு வேதிகை அமைக்கும் பணிகளில் 300 சிவாச்சாரியார்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் கோவிலின் விமான கலசங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது, நேற்று வரகு தானியம் போன்றவைகள் நிரப்பி தங்கமுலாம் பூசப்பட்ட கலசங்களை கோபுரத்தில் பொருத்தும் பணியானது நடைபெற்றது. நேற்று காலை வெண்ணாற்றில் இருந்து புனித காவிரி நீரானது கலசங்களில் யானை மீது வைத்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக வந்தனர்.

Image result for தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு"

இந்த நிகழ்வின் போது ஏராளமான பெண்கள் முளப்பாரி எடுத்தும் ஓதுவார்கள் தேவாரம் மற்றும் திருவாசகம், திருப்பன்னிசை முழங்க வந்தனர்.

யானை மீது எடுத்து வரப்பட்ட புனித நீர் குடங்களை  கோவிலினுள் உள்ளே வைத்து யாக பூஜைகள் தொடங்கியது.இந்த பூஜைகள் அனைத்தும் கோவிலின் பின்புறம் உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் இருக்கக்கூடிய மண்டபத்தில் 110 புனித நீர் குடங்களுக்கு இன்று பூஜைகள் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று  முதல் குடமுழுக்கு நாளான 5- ந் தேதி வரை 8 கால பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஓதுவார்கள்  தமிழில் திருமறைப்படியும் மற்றும் சிவாச்சாரியார்கள் ஆகம முறைப்படியும் மேலும் சாஸ்திரிகள் வேத முறைப்படியும் பூஜையை நடத்துவார்கள்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்கான அதிநவீன சுழல் மேஜை ஊர்தி கொண்டு வரப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பின்னர்  நடைபெறும் குடமுழுக்கு  என்பதால் விழாவிற்கு சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனது குறிப்பிடத்தக்கது.ள்ளன.

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

7 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

7 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

8 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

9 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

10 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

11 hours ago