40 சதவீத இருக்கை, ஆன்லைன் டிக்கெட் போன்ற பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், சினிமா சூட்டிங் செல்வதற்கும் மார்ச் மாதம் முதல் தற்போது வரை கிடைக்கப் பெறாமல் உள்ளது.
இதுதொடர்பாக திரைத்துறையினர் தொடர்ந்து தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செப்டம்பர் மாதம் தியேட்டர்களை திறப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.
திரையரங்கு உரிமையாளர்கள், செப்டம்பர் மாதம் எப்படியும் தியேட்டர்களை திறந்து விட அரசு கூறிவிடும் என்ற நம்பிக்கையில் தற்போது செயல்பட்டு வருகின்றனர். அப்படி திரையரங்குகள் திறக்கப்பட்டால், அதற்கு அரசு விதித்துள்ள விதிமுறைகள் இவைதான்என தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஒரு திரையரங்கில் 40 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் எனவும், டிக்கெட்டுகள் கவுண்டர்களில் அல்லாமல் ஆன்லைன் புக்கிங் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும், அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும், உடல் வெப்பநிலை சரிபார்த்த பின்னரே வரிசையாக தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும்,
ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் எனவும், ஒவ்வொரு காட்சிக்கு இடையிலும் ஒன்றரை மணி நேரம் இடைவெளி விடப்படும் எனவும், அந்த இடைவெளி நேரத்தில் கிருமிநாசினி கொண்டு இருக்கைகளை சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. மேற்கண்ட விதிமுறைகளை உள்ளடக்கிய விதிமுறைகளை பின்பற்றித்தான் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு திரையரங்கங்கள் திறக்கப்படும் என தற்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
இதனால் சினிமா பிரியர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…