கல்வி தரத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது! அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு!
கல்வி தரத்தில் தமிழ்நாடானது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை பின்னுக்கு தள்ளியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி என்பதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் இறுதி தேர்வு அல்லது மறுதேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த இந்த திருத்தத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற நடைமுறை தொடரும் என தெரிவித்தார்.
இந்த கட்டாய பாஸ் நடைமுறை திருத்தம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” ஆல் பாஸ் நடைமுறை 1980களில் தேவைப்பட்டது. 2024இல் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு வரணும். அதே சமயம், குறைந்தபட்சமாவது அவர்கள் படிக்க வேண்டும். மாநில அரசு கட்டாய பாஸ் சட்டதிருத்தத்தை அமல்படுத்தவில்லை. ஆனால், மத்திய அரசு ஒரு காரணத்தோடு தான் இதனை கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் ஒரு கற்றல் குறைபாடு இருக்கிறது. இதனை தமிழக கல்வி அமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள சூழலில், எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பதை விட, அவர்கள் படிப்பு முறை எவ்வளவு தரத்துடன் இருக்கிறது என்பதை பற்றியது தான். கர்நாடகா, கேர்ளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை தாண்டி சென்றுவிட்டன. NCRT, CBSE குழுவினர் 3, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாணவர்கள் கல்வித்திறனை சோதனை செய்வர். அதில், 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தமிழக கல்வித்தரம் கிழே சென்று கொண்டு இருக்கிறது. இது அரசியல் சண்டை இல்லை. மாணவர்கள் கல்வி பற்றியது. பீகார், உ.பியோடு தமிழ்நாட்டை ஒப்பீடு செய்யக்கூடாது. கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுடன் ஒப்பீடு செய்கையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. ” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.