தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கன் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக இந்த வருடம் எல்.கே.ஜி, கோமாளி, பப்பி என மூன்று படங்கள் வெளியாகின. இதில் மூன்று படமும் ஹிட்டாகின. அதிலும் கோமாளி படம் மெகா ஹிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில், எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து அப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். பிரபு என்பவர் இயக்கி இருந்தார். அரசியல் படமாக உருவான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெளியான கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து இருந்தார். பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் காமெடி, காதல் என அனைவரும் ரசிக்கும் படி அமைந்ததால் படம் மெகா ஹிட்டானது. இதனை அடுத்து வருண் -யோகி பாபு நடிப்பில் வெளியான பப்பி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
இந்த மூன்று படங்களின் வெற்றிவிழா சென்னை YMCA மைதானத்தில் வைத்து நவம்பர் 24ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து மேற்கண்ட திரைப்பட கலைஞர்களை கௌரவிக்க உள்ளார். என வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…