மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை…மின்னஞ்சல் மூலம் உறுப்பினர் அடையாள எண்…
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளதாக தனக்கு மின்னஞ்சல் மூலம் உறுப்பினர் அடையாள எண் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கு உறுப்பினர் சேர்ப்பதற்காக கிடைக்கும் மின்னஞ்சலுக்கெல்லாம் அழைப்பு விடுப்பதாகவும், தனது மின்னஞ்சல் முகவரிக்கும் தான் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளதாக மின்னஞ்சல் வந்துள்ளது வேடிக்கையாக உள்ளது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.