Tamil News Today Live : பிரதமரின் குஜராத் பயணம்…. மக்களவை தேர்தல் அரசியல் நகர்வுகள்…
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து 65 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் எடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இன்றுடன் தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது.
இவ்வாறான பல்வேறு தொடர் நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்….