தமிழக வீரருக்கு இடமில்லையா – ஆர்.ஜே.பாலாஜி கொந்தளிப்பு
சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் அபினவ் முகுந்திற்கு இந்திய அணியில் இடம் இல்லையா என்று நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி கொந்தளித்துள்ளார்.
அபினவ் முகுந்த் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.இவர் இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 320 ரன்களை அடித்துள்ளார்.மேலும் 2 அரை சதங்கள் அடித்துள்ளார்.அபினவ் கடைசியாக 2017-ஆம் ஆண்டு இலங்கைக்கு அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இந்த வருடம் நடைபெற்ற விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழக அணிக்காக 12 ஆட்டங்களில் விளையாடி 600 ரன்கள் அடித்துள்ளார் .அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் இவருக்குத்தான் . கடந்த ஆண்டு விஜய் ஹசாரே போட்டியில் 9 போட்டிகளில் விளையாடி 560 ரன்கள் எடுத்தார் .
And for the record, Abinav Mukund’s last innings for Team India, he scored 81 against Srilanka in a test match and never got picked after that. Yes, after scoring 81 – He was dropped.! He is still only 29, Keep playing and keep fighting buddy !!! https://t.co/z2smOErVIZ
— RJ Balaji (@RJ_Balaji) November 2, 2019
ஆனால் அபினவ் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த நிலையில் இது குறித்து நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் 50 மற்றும் 100 ரன்கள் அடித்தால் அந்த வீரர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம்.ஆனால் விஜய் ஹசரே போட்டியில் அபினவ் முகுந்த் 3 முறை தலா 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.இந்தாண்டு நடைபெற்ற சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் அவர்தான்.இந்திய அணிக்கு அவர் தேர்வாகவில்லை என்றால் கூட பரவாயில்லை,தியோதர் கோப்பை போட்டியில் கூட அவர் தேர்வாகவில்லை.
இந்திய அணிக்காக முகுந்த் கடைசியாக விளையாடிய இலங்கையுடன் விளையாடியபோது 81 ரன்கள் அடித்தார் .இதன் பிறகு இந்திய அணிக்கு அவர் தேர்வாகவே இல்லை.அவர் 81 ரன்கள் எடுத்த பிறகு இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு 29 வயதுதான் ஆகின்றது. தொடர்ந்து விளையாடி போராடுங்கள் முகுந்த் என்று பதிவிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி.