தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதிடாமல் தோற்றிருப்பது கண்டனத்திற்குரியது : திமுக பொருளாளர் துரைமுருகன்
உச்சநீதிமன்றம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே காவிரி அணை கட்ட அனுமதி அளித்துள்ள நிலையில், இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்கள் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையாக வாதிடாமல் தோற்றிருப்பது கண்டனத்திற்குரியது. நதிநீர் உரிமையை நிலைநாட்டி, 5 மாவட்ட மக்களை பாதுகாக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து முதல்வர் மேல்முறையீடு செய்ய வேண்டும்.’ என கூறியுள்ளார்.