தமிழகத்தில் மட்டும் கர்ணன் படம் இத்தனை கோடி வசூலா…??
தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூலும் செய்துவருகிறது.
இந்த நிலையில் வெளியான நாளில் இருந்து தற்போது வரை தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அந்த வகையில், இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை தமிழகத்தில் மட்டும் 47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.