சதுரங்க வேட்டை பட நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பு காரணமாக காலமானார்…!

தமிழில் சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் காலமானார்.இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக,கடந்த மாதம் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அதன்பின்னர்,நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக காலமானார்கள்.மேலும்,நடிகர்கள் நெல்லை சிவா,ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நடித்த நடிகர் மற்றும் உதவி இயக்குநர் பவுன்ராஜ் என பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில்,தமிழ் சினிமாவில் ஆறு, காக்கி சட்டை, கருப்பன், சதுரங்க வேட்டை,என் ஆளோட செருப்பை காணோம் போன்ற படங்கள் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள ஐயப்பன் கோபி மாரடைப்பால் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.ஆனால்,இந்த செய்தி இப்போது தான் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து,மாரடைப்பால் இறந்த நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபியின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025