இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் – அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த பதில்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தி மொழி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் வாதிகள் மற்றும் நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவரிடம் அமித்ஷாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி என ஒற்றை வார்த்தையில் கூலாக பதில் அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025