தமிழ் கற்றுக்கொள்ள கடினமாக உள்ளது – கங்கனா ரணாவத்!
தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் தான் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா நடிக்கிறார். இவர் இதற்காக பாரதம் மற்றும் ஜெயலலிதா கற்ற கலைகள் சிலவற்றை கற்று வருகிறார்.
இந்தி மற்றும் தமிழில் வெளியவுள்ள இந்த படத்தை பற்றி அண்மையில் பேசிய இவர், இந்த படத்திற்காக தமிழ் கற்று வருகிரேன். ஆனாலும், கடினமாக தான் உள்ளது தமிழ் கற்பதற்கு. தற்போது மனப்பாடம் செய்து தான் தமிழை பேசுகிறான், விரைவில் கற்றுக்கொள்வேன் என கூறியுள்ளார்.