தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தாராபுரத்தில் பிறந்தவர் தான் தமிழ் திரைப்பட உலகின் நகைச்சுவை நாயகன் நாகேஷ். இவரது இயற்பெயர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன். 1959 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் புகுந்த இவர், காதலிக்க நேரமில்லை எனும் ஸ்ரீதரின் திரைப்படத்தின் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து, அதன் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், 1974 ஆம் ஆண்டில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் எனும் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் வழங்கியது.
தமிழ் திரையுலகில் பல்வேறு முக்கியமான பிரபலங்களுடன் நடித்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…