'ஆச்சி' மனோரமாவின் 4ம் ஆண்டு நினைவு தினம்..!
மனோரமா தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார்.
இவர் எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா, கருணாநிதி ஆகியருடன் இணைந்து நடித்துள்ளார். மனோரமா தனது 78வது வயதில் 2015 அக்.10 இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். எனவே, நடிகை மனோரமா இறந்து இன்றுடன் 4 ஆண்டு நிறைவடைந்ததுள்ளது.