தமிழ் சினிமாவில் இந்த வருடம் தொடக்கம் முதலே பாக்ஸ் ஆபிஸ் அதிர வைக்கும் படி வசூல் கொட்டும் படி, திரைப்படங்கள் வெளியாகின. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் படமாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இப்படம் 200 கோடி வசூலை தாண்டியது.
அடுத்து அதே தினத்தில் தல அஜித்தின் விசுவாசம் படம் வெளியாகி தல ரசிகர்கள் மட்டுமல்லாது. நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பத்தோடு சென்று பார்க்கும் அஜித் படமாக மாறியிருந்தது. அந்த படமும் மிக பெரிய வெற்றியடைந்தது. இப்படம் 150 கோடி வசூலை தாண்டி வினியோகிஸ்தர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்தது.
அடுத்து கோடை விடுமுறையில் காமெடி பேய் படமாக ராகவா லாரன்ஸின் வழக்கமான மாஸ் மசாலா பேய் படமாக வெளியான காஞ்சனா 3 படம் ரிலீசாகி வெற்றி பெரிய வெற்றிபெற்றது. இப்படம் 150 கோடி வசூலை தாண்டி வசூல் செய்தது.
அடுத்து அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படம் 150 கோடிகும் அதிகமான வசூலை தாண்டியது.
அடுத்து அண்மையில் தீபாவளிக்கு வெளியான தளபதி விஜயின் பிகில் திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகி பிரமாண்ட வசூலையும் பெற்றது, இப்படம் தற்போது வரை 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே நாளில் வெளியான கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியுள்ளது. இது கார்த்தியின் முதல் 100 கோடி திரைப்படமாகும்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…