#TamilCinema2019 : கதைக்களத்தை நம்பி வெளியாகி பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படங்கள்!

Published by
மணிகண்டன்
  • தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனையும், கதைக்களத்தையும் நம்பி வெளியாகி நிறைய படங்கள் ஹிட்டாகியுள்ளான.
  • அதில் நேர்கொண்ட பார்வை, கைதி, அசுரன், கோமாளி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வெற்றியை பதிவு செய்தது.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ படங்கள் ரசிகர்களை வெகுவாக எதிர்பார்க்க வைக்கும். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டால் படம் மாஸ் ஹிட்டாகி விடும். அப்படி பூர்த்தி செய்யவில்லை என்றாலும் ஓரளவு லாபம் பார்த்து விடுகின்றன.

அதனையும் மீறி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படத்தின் கதைக்களமும், படமாக்கப்பட்ட விதமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றியடைந்த திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கான காட்சிகள் அதிகமாக இருக்காது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டு இப்படம் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்தது. அடுத்து ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம். 90’s கிட்ஸ் வாழ்க்கையை மையப்படுத்தி பழைய நினைவுகளை வைத்து சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து படமாக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படம் ஹிட்டாகி இருந்தது.

அடுத்து தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன். இப்படம் சாதீய கொடுமைகள் பற்றியும், அதனால் ஒரு குடும்பம் படும் துயரம் பற்றியும், தன் குடும்பத்தை பாதுகாக்க ஒரு தகப்பனாக நடித்த தனுஷ் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பெரிய வெற்றியை பெற்றது.

அடுத்து தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம். கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹீரோயின் இல்லை. படமுழுக்க ஆக்சன். ஒரு இரவில் நடைபெறும் கதை. மேலும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருந்தது. அதே நாளில்தளபதி விஜயின் பிகில் திரைப்படமும் பிரமாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகி இருந்தது. தளபதி விஜய் – அட்லீ பிரமாண்ட கூட்டணி, பெண்கள் கால்பந்தை மையப்படுத்திய திரைப்படம், ரசிகர்களின் பிரமாண்ட எதிர்பார்ப்பு என அனைத்தையும் மீறி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்று கைதி பெரிய வெற்றி பெற்றது.

இது  போக எல்.கே.ஜி, சிவப்பு மஞ்சள் பச்சை, ராட்சசி, ஒத்த செருப்பு, மான்ஸ்டர், மகாமுனி, கொலைகாரன், ஜேக்பாட், கூர்கா, ஆதித்யா வர்மா, தடம், 90 ml, ஆடை, உறியடி 2, அயோக்யா, 100 ஆகிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

7 minutes ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

40 minutes ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

1 hour ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

2 hours ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

10 hours ago