7 வருடத்திற்கும் சேர்த்து மொத்தமாக திரை பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அளித்தார் தமிழக முதல்வர்!

Default Image

தமிழ் திரையுலகில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கலைமாமணி விருதுகள் திரை முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகள் கடந்த 7 வருடமாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளளது. 2011 முதல் 2018 வரை கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கபட்டு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கியமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீகாந்த், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சசிகுமார், பிரபுதேவா, , வரலக்ஷ்மி சரத்குமார், பிரியாமணி, பிரசன்னா, சந்தானம், சூரி, ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மா, ரத்னவேலு, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, அவர்களுக்கு நேற்று கலைமாமணி விருது வழங்கும் விழாவில், கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டது இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திரைப்பிரபலங்களளுக்கு வழங்கி கௌவுரவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்