நடிகர் ஆர். கே. சுரேஷ் அடுத்ததாக பாலா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக தனது உடல் எடையை 105லிருந்து 79கிலோவாக குறைத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பாலா. இவரது திரைப்படம் சற்று வித்தியாசமாக இருக்கும். ரசிகர்களை கவரும் வகையில் சிறந்த கதைகளத்தை கொண்டதாக இருக்கும் இவரது படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் தான் பெற்றிருக்கிறது. கடைசியாக பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் நாச்சியார் என்ற படம் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த நிலையில் இவர் அடுத்ததாக ஆர். கே. சுரேஷ் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த படம் மலையாளத்தில் ஜிஜோ ஜார்ஜ் நடித்த ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும், இதில் ஆர். கே. சுரேஷ் இரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஆர். கே. சுரேஷ் இந்த படத்திற்காக தனது உடல் எடையை 105கிலோவிலிருந்து 79கிலோவாக குறைத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். ஏற்கனவே ஆர். கே. சுரேஷ் பாலாவின் தார தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்து கலக்கியது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…