தமிழகத்தில் மயானத்திற்காக போராடும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுனர்!
மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக வேதனை தமிழகத்தில் மயானத்திற்காக போராடும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
சென்னையில், மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன், மயானத்தை அகற்றி தலித் மக்களுக்கு வீடு கட்டித்தருவதாக தமிழக அரசு கூறுவதில் உண்மையில்லை என்று கூறினார். தமிழகத்தில் மனுதர்ம ஆட்சியைக் கொண்டுவர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றுவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் வட இந்தியர்கள், மார்வாடிகளை குடியேற்றி, பூர்வ குடிமக்களை வெளியேற்றியதால் தான் தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி சரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றினால், கலிங்கப்பட்டு மதுபானக் கடையில் நிகழ்ந்தது போன்று மீண்டும் ஓர் புரட்சி வெடிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.