டாக் ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கும் தமன்னா.! சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
ஓடிடி தளத்தில் துவங்கவுள்ள டாக் ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கும் தமன்னாவிற்கு ஒரு எபிசோடிற்கு மட்டுமே 7 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி என்னும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.தற்போது கங்கனா ரணாவத் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது அடுத்து ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓடிடி தளத்திற்காக தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் துவங்கவுள்ள ‘ஆஹா’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடிற்காக தமன்னாவிற்கு ரூ. 7லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.