கபடி பயிற்சியாளராக களமிறங்கும் தமன்னா! ஹீரோ யாரு தெரியுமா?!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட படமான சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பெட்ரோமாக்ஸ் திரைப்படம் அக்டோபர் 11-இல் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர், புதிதாக கோபிசந்த் ( ஜெயம் பட வில்லன் ) நடிக்கும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக களமிறங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்