பழம்பெரும் நடிகையின் பயோபிக்கில் தமன்னா‌.?எந்த நடிகை தெரியுமா.?

Default Image

பழம்பெரும் நடிகையான ஜமுனாவின் பயோபிக்கில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய திரையுலகில் தற்போது பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகிறது.சமீபத்தில் கூட தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்.மேலும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
அதே போன்று விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மாதவன் நடித்து வருகிறார் என்பதும், அனைவரும் அறிந்ததே.அதே போன்று நடிகை சாவித்ரி உட்பட பல நடிகைகளின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது பழம்பெரும் நடிகையான ஜமுனாவின் பயோபிக் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது எம்ஜிஆருடன் தாய் மகளுக்கு கட்டிய தாலி , ஜெமினி கணேசனுடன் மிஸ்ஸியம்மா , சிவாஜி கணேசனுடன் தெனாலிராமன்,தங்களை ரகசியம்,மருதநாட்டு வீரன் , கமல்ஹாசன் நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் அவருக்கு அம்மாவாகவும் ஜமுனா நடித்திருந்தார்.இவ்வாறு பல படங்களில் நடித்த இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு படம் உருவாக உள்ளதாகவும்,அதில் ஜமுனா கேரக்டரில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் உண்மையெனில் விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்