கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகை தமன்னா.!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில், தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் தமன்னாவிற்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமன்னா, நேற்று கொரோனாவிலிருந்து வர் மும்பையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டேன். மேலும்,14 நாள் தனிமைபடுத்தலுக்கு பிறகு வீட்டுக்கும் திரும்பி வந்து விட்டேன். நான் நலம்பெற பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
View this post on Instagram