ஹமாஸ் இல்லாமல் காசா இல்லை.! பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.! ஹமாஸ் தலைவர் பரபரப்பு.! 

Hamas leader Ismail Haniyeh

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 2 மாதங்கள் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் 1200 பேரும், போர் நடைபெறும் காசா நகரில் சுமார் 18ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.  இரு தரப்பில் இருந்தும் அண்மையில் ஒரு வார காலத்திற்கு போர் இடை நிறுத்தம் செய்யப்பட்டு பிணை கைதிகள் இரு தரப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டு இருந்தனர்.

காசா போர் நிறுத்தம் தீர்மானம்.! அப்போது புறக்கணிப்பு.! இப்போது இந்தியா ஆதரவு.!

போர் இடை நிறுத்தம் முடிந்த பிறகு மீண்டும் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியே பேட்டி அளித்து இருந்தார். அப்போது,  பாலஸ்தீனிய எல்லை ஆக்கிரமிப்பு, அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்களை (இஸ்ரேல்) முழுதாக அகற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்குத் தாங்கள் தயாராக இருப்பதாக ஹனியே கூறினார்.

மேலும், ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீன மக்களுக்கான உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு பேச்சுவார்த்தையானது வழிவகுக்கும் என்றும் அதற்கு ஹாமாஸ் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இஸ்ரேலியாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய எந்தவொரு பேசுவார்த்தை அல்லது முயற்சிகளை பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் ஹனியே கூறினார்.

பாலஸ்தீனியத்தை ஒழுங்காக கட்டமைக்க முயற்சிகள் மேற்கொள்கிறோம்.  ஹமாஸ் இல்லாமல் காஸாவில் எந்த பேச்சுவார்தையும், ஒப்பந்தமும் ஒரு மாயை என்றும்  ஹமாஸ் முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிய்வித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்