ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்க படைகள் வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – தலிபான்கள் எச்சரிக்கை!
வருகின்ற ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், ஆப்கானிஸ்தான் கலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை ஜி 7 அவசர கூட்டத்துக்கு இங்கிலாந்து வீரர் போரிஸ் ஜான்சன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் அவர்கள் தெரிவிக்கையில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களது படைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இரு நாடுகளும் தங்களது படைகளை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் கோரினால் அது தங்களிடைய அவநம்பிக்கையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறக் கூடிய அனைத்து அமைப்புகளையும் வெளியேற்றுவதில், எந்த சிக்கலும் இல்லை எனவும் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.