ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி – விமானத்தில் தொங்கி சென்ற 3 பேர் உயிரிழப்பு!

விமானத்தின் சக்கரத்தை பிடித்து பயணித்த 3 பேர் பறக்கும் விமானத்தில் இருந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து உயிரிழப்பு.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். நகர பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சிப்பது போல், விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் விமானத்தில் இடம் கிடைக்காத நிலையில், விமான சக்கரத்தில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். விமானம் உயரே பறந்த நிலையில், பிடிமானத்தை இழந்த 3 பேர் வானில் இருந்து கீழே குடியிருப்பு பகுதியில் விழும் வீடியோக்கள் வெளியாகி பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதில் வானில் இருந்து கீழே விழுந்த 3 பேர் பரிதமாக உயிரிழந்தனர்.
سقوط شخصان من الطائرة الامريكية العسكرية التي اقلعت من مطار كابول بعد تعلقهم بعجلات الطائرة هربا من #طالبان #Kabul #KabulHasFallen #رغد_الحيالي pic.twitter.com/d2YvzdWFwh
— Raghad Al-Hayali ???????? رغد الحيالي (@Raghadalhayali) August 16, 2021
Can’t believe my eyes. Men holding lower part of the US aircraft moments before it took off from #Kabul airport. #AfghanistanBurning #Afghanishtan #USAabandonedAfghanistan pic.twitter.com/vpRRVgur54
— Covid Care SOS (@CovidCareIndore) August 16, 2021