தலிபான்கள் அராஜகம் : முன்னாள் அரசுப்படை வீரர்கள் உட்பட 13 பேர் கொலை!

ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசுப்படை வீரர்கள் உட்பட 13 பேர் தாலிபான்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் இருந்த பிற நாட்டவர் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இந்நிலையில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான அடக்கு முறையும், அராஜகமான சில செயல்முறைகளும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.
மேலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரக்கூடிய ஆயுதமேந்திய குழுக்களையும் தலிபான்கள் அழித்து வருகின்றனர். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள ஹைதர் என்னும் மாவட்டத்தில் கடந்த 30 ஆம் தேதி புகுந்த தலிபான்கள் 17 வயது சிறுமி ஒருவரையும், இதற்கு முந்தைய ஆட்சியில் அரசு பணியாற்றிய ராணுவ வீரர்கள் 11 பேர் உட்பட மொத்தம் 13 பேரை கொலை செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025