முதலாக்கிற்கு பாகிஸ்தானிலும் தலாக் தலாக் தான்! அதிகரித்து வரும் தலாக் எதிர்ப்பு!
இஸலாமிய கலாச்சாரத்தில் மனைவியை விவாகரத்து செய்ய கணவன்மார்கள் மூன்றுமுறை தலாக் என கூறினால் போதும். கணவன் மனைவியை பிரிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளப்படும்.
இந்த முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்து, இந்திய பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகிறது.
இதேபோல சில இஸ்லாமிய நாடுகளிலும் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது விரைவில் அண்டை நாடான பாகிஸ்தானும் இணைய உள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய நெறிமுறைகள் பற்றி அரசுக்கு யோசனை கூறும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலானது, முத்தலாக் தடை விதிப்பதற்கு பரிந்துரை செய்துள்ளதாம்.
பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரோக் நசீமும் இதற்க்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் இந்த முத்தலாக் தடை மசோதாவை விரைவில் நிறைவேற்றுமாறும், தண்டனைகள் குறித்து அடுத்து முடிவு எடுத்துக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளாராம்.