ரஷ்யாவில் 5000 கிலோ மீட்டர் பைக் டிராவல்.! மாஸ் காட்டும் தல அஜித்.!
ரஷ்யாவில் 5000 கிலோ மீட்டர் பைக்கில் நடிகர் அஜித் பயணம் செய்யவுள்ளதாக தகவல்.
நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அஜித் மற்றும் படக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யா சென்றனர். விறு விறுவென முழுவீச்சில் நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்த நடிகர் அஜித், ரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக சுமார் 5000 கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதற்கு முன்பு வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, அஜித் அங்கிருந்து சுமார் 10000 கிலோ மீட்டர் வடகிழக்கு மாநிலங்கள் வரை சாலைப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.