தைவான் எல்லையை கடந்த சீன ராணுவம்.? போர் பதற்றம் ஆரம்பமாகிறதா.?!
சீன ராணுவ ஜெட் விமானம், தைவான் வான்வழி எல்லையை கடந்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும், ஆசிய நாடுகளின் அமெரிக்க பிரதிநிதியாகவும், இருக்கும் நான்சி பெலோசி தைவான் வருகையை அடுத்து சீனா தைவான் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது.
நான்சி பெலோசி வருகையின் போதே, போர் விமானங்கள், போர் கப்பல்களை நிறுத்தி பயமுறுத்தியது சீனா. தைவானை சுற்றியுள்ள சீன எல்லையில் தீவிர ராணுவ பயிற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது, சீன ராணுவ ஜெட் விமானம், தைவான் வான்வழி எல்லையை கடந்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் கொஞ்சம் அதிகரித்துள்ள்ளது என்றே கூறபடுகிறது.