ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இருந்து பெர்த் நகருக்கு குவாண்டாஸ் விமான நிறுவனத்திற்க்கு சொந்தமான “ஏர்பஸ் ஏ330” ரக விமானம் 271 பயணிகளை ஏற்றி கொண்டு பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றது.
அப்போது விமானம் புறப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் விமானிகளின் அறைக்குள் இருந்து திடீரென புகை வெளியானது.எப்படி புகை வருகிறது?என்ன நடக்கிறது? என பார்ப்பதற்குள் புகை அறை முழுவதும் பரவியது. இதனால் பயணிகள் பதற்றமும், பீதியும் அடைந்தனர்.
இதை தொடர்ந்து விமானி விமானத்தை மீண்டும் சிட்னி விமான நிலையத்திற்கு திருப்பினார். அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தின் 2 புறமும் உள்ள அவசர கால கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
பயத்தில் இருந்த பயணிகள் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு வெளியேவர முயன்றதால் சிலருக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. விமானி சிறப்பாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…