பரபரப்பு.!நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் புகை .! பயணிகளுக்கு காயம்.!

Default Image
  • சிட்னியில் இருந்து குவாண்டாஸ்  “ஏர்பஸ் ஏ330” ரக விமானம் 271 பயணிகளை ஏற்றி கொண்டு பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றது. 
  • புறப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் விமானிகளின் அறைக்குள் இருந்து  திடீரென புகை வெளியானது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இருந்து பெர்த் நகருக்கு குவாண்டாஸ் விமான நிறுவனத்திற்க்கு சொந்தமான “ஏர்பஸ் ஏ330” ரக விமானம் 271 பயணிகளை ஏற்றி கொண்டு பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றது.

அப்போது விமானம் புறப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் விமானிகளின் அறைக்குள் இருந்து  திடீரென புகை வெளியானது.எப்படி புகை வருகிறது?என்ன நடக்கிறது? என பார்ப்பதற்குள் புகை அறை முழுவதும் பரவியது. இதனால் பயணிகள் பதற்றமும், பீதியும் அடைந்தனர்.

இதை தொடர்ந்து  விமானி விமானத்தை மீண்டும் சிட்னி விமான நிலையத்திற்கு திருப்பினார். அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தின் 2 புறமும் உள்ள அவசர கால கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

பயத்தில் இருந்த பயணிகள் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு வெளியேவர முயன்றதால் சிலருக்கு கை, கால்களில் லேசான காயம்  ஏற்பட்டது. விமானி சிறப்பாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்