#TaareGinn -சுஷாந்த் சிங்கின் “Dil Bechaara”படத்தின் அழகான பாடல் இதோ .!

மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தின் #TaareGinn என்ற பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.தற்போது அவரது கடைசி படத்தினை பார்க்க ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேனி என்ற கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங்கும் ,கிஸி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சனாவும் நடித்துள்ளனர் . ஏ மேஜிக்கல் லவ் ஸ்டோரியான இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று டிரெண்டிங்கில் இடம்பெற்று சாதனை படைத்தது.மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் பாடிய டைட்டில் டிராக் பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை புரிந்தது.இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து “TaareGinn”என்ற பாடல் வெளியாகி உள்ளது.அமிதாப் பட்டார்சாட்டர்ஜி எழுதியுள்ள இந்த பாடலுக்கு ஸ்ரேயா கோஷால் மற்றும்மோஹித் சவுகான் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.தற்போது அந்த பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025