இந்திய அணி படுதோல்வி!முதல் டி20 ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி…..

Default Image

இந்திய அணியை இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 போட்டியின் முதல் ஆட்டத்தில்,  5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

கொழும்பில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 49 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். மணீஷ் பாண்டே 37 ரன்களும், ரிஷப் பந்த் 23 ரன்களும் சேர்த்தனர்.

Image result for india vs sri lanka 2018 nidahas

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. குசல் பெரேரா 37 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். திசாரா பெரேரா ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்