சிரியா மருத்துவமனையில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 13 பேர் பலி..!

Default Image
  • சிரியாவில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற இரு ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் நடந்த ஏவுகணை தாக்குதல் குறித்து சிரியன் அமெரிக்க மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த சனிக்கிழமையன்று, சிரியாவில் அஃப்ரின் நகரத்தில் இருக்கும் அல்-ஷிபா  மருத்துவமனையில் இரண்டு ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. இதில் அவசரகால பிரிவு அறை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களில் இருவர் மருத்துவப்பணியாளர்கள் மற்றும் இருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள். இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் காரணமாக அங்கிருக்கும் மற்ற நோயாளிகளை வேறு இடத்திற்கு வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு முதல் சிரியா துருக்கி ராணுவம் மற்றும் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் அப்படைகளுக்கும், குர்திஸ் கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த தாக்குதலை குறித்து குர்திஸ் கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என்று துருக்கி தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து குர்திஸ் படை தலைவர் மஸ்லும் அபாதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்