ஆளும் அரசே சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது!சொந்த மக்களையே சிதைக்கும் சிரியா …..
ஒரு மாதம் போர் நிறுத்த தீர்மானம் போடப்பட்ட சில மணி நேரத்தில் சிரியாவில் , ஆளும் அரசே அதனை மீறியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா (Eastern Ghouta) பகுதியில் கடந்த 9 நாட்களுக்கும் மேலாக ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுடன் அரசுப் படைகள் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகின்றன. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு ஆதரவு படைகளுக்கும் நடைபெற்று வரும் சண்டை 8வது ஆண்டை நெருங்கும் நிலையில், கடந்த ஒரு வாரமாக, சிரியா ராணுவம் மற்றும் ரஷ்யப் படைகளின் கொடூரத் தாக்குதல் தீவிரமாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.