சிரியா ராணுவம் 70 சதவீத பகுதிகளை கைப்பற்றியதாக அறிவிப்பு!

Default Image

70 சதவீத பகுதிகளை சிரியாவின் கிழக்கு குவாட்டா நகரில்  போராளிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக அரசுப் படைகள் தெரிவித்துள்ளன. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உள்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சிரிய ராணுவமும் தற்போது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

குவட்டா நகரில் இருந்து நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேறி உள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே குவட்டா நகரில் 70 சதவீத பகுதிகளை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றி விட்டதாக சிரிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்