சைனஸ் பிரச்சனையின் அறிகுறிகள்..!!

Default Image

 

அக்னி வெயில் சுட்டெரிக்கும் இந்த டைம்ல ஜலதோஷ பிரச்சினை அதிகமாக வருகிறது. இதற்கு காற்றின் வழியாக பரவும் வைரஸ் தான் காரணம். மேலும் தவறான உணவு பழக்கம் காரணமாகவும் வைரஸ்கள் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்குகிறது. இந்த ஜலதோஷம் முற்றி வரும் விளைவு தான் சைனஸ்.

பொதுவாக ஜலதோஷம் 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடும். அப்படி குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு சைனஸ் என்று தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்

மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். அப்போது ஜலதோஷத்தால் உருவாகும் சளி அந்த சைனஸ் அறைகளில் தங்கி கிருமி கலந்த சீழாகி மாறி விடுகிறது. அதனால் நன்றாக சுவாசிக்க முடியாது. தலை பாரமாக இருக்கும். சரியாக பேசவும் இயலாது. குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட விண் விண்’ என்று தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.

மூக்கில் உள்ள சைனஸ் அறைகள் அடைக்க பல காரணங்கள் உள்ளன. மூக்கின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் சிலருக்கு சற்று வளைந்து இருக்கும். அந்த தடுப்புச் சுவர் நடுவில் இருந்தால் சைனஸ் அறைகளின் உள்ளே காற்று சென்று வருவதில் எந்த தடையும் இருக்காது.

மாறாக அது வளைந்து இருந்தால் அதன் அருகில் இருக்கும் சைனஸ் அறையின் வாசலை அது எப்போது வேண்டுமானாலும் அடைத்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சைனஸ் அறை வாசலில் உள்ள சதை வளர்ச்சி ஏற்பட்டாலும் அடைத்துக் கொள்ளும். மேலும் தூசுகள் நிரம்பிய இடங்களில் வேலை பார்த்தால் மூக்குக்குள் தூசுகள் சென்று ஜவ்வுகளைத் தாக்கி சளி தொந்தரவை ஏற்படுத்தி விடும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்