சுவிட்சர்லாந்து ஆராய்ச்சி: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா….?
சுவிட்சர்லாந்து நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி கர்ப்பிணிகளும் செலுத்திக் கொள்ளலாம் என அண்மையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கருவில் உள்ள குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் பலருக்கும் உள்ள நிலையில், இது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள நோயெதிர்ப்பியல் நிறுவனம் ஆராய்ச்சியில் மேற்கொண்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கருவுக்கும் நஞ்சு கொடிக்கும் பாதுகாப்பு அளிப்பதாகவும், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து அந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கூறும் பொழுது, கர்ப்பிணிகளுக்கு அதே வயது கொண்ட மற்றவர்களை காட்டிலும் கொரோனா பரவுவதற்கு 70 சதவீதம் கூடுதல் வாய்ப்பு உள்ளதாகவும், 10% கடுமையான பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி உள்ளனர். எனவே கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.