கொரோனா வைரஸ் வார்டில் நீச்சல் உடையில் வலம் வந்த செவிலியர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மக்களை காப்பாற்றும் பாணியில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில், துலா என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையில், கொரோனா வைரஸ் வார்டில் ஒரு இளம் செவிலியர் பணிபுரிந்து வருகிறார். தற்போது கோடைகாலம் நிலவி வருவதால், இவர் நீச்சல் உடை அணிந்து, அதற்கு மேலாக பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார்.
இந்நிலையில், இவர் இந்த உடையுடன் நோயாளிகளுக்கு ஒரு தட்டில் மருந்து எடுத்து சென்றுள்ளார். இதனை யாரோ படப்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், இவரது இந்த செயலுக்கு இணையத்தில் பாராட்டும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
இதனையடுத்து, இவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மேலும், சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…