கொரோனா வைரஸ் வார்டில் நீச்சல் உடையில் வலம் வந்த செவிலியர்!

Default Image

கொரோனா வைரஸ் வார்டில் நீச்சல் உடையில் வலம் வந்த செவிலியர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மக்களை காப்பாற்றும் பாணியில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில், துலா என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையில், கொரோனா வைரஸ் வார்டில் ஒரு இளம்  செவிலியர் பணிபுரிந்து வருகிறார். தற்போது கோடைகாலம் நிலவி வருவதால், இவர் நீச்சல் உடை அணிந்து, அதற்கு மேலாக பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார். 

இந்நிலையில், இவர் இந்த உடையுடன் நோயாளிகளுக்கு ஒரு தட்டில் மருந்து எடுத்து சென்றுள்ளார். இதனை யாரோ படப்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், இவரது இந்த செயலுக்கு இணையத்தில் பாராட்டும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. 

இதனையடுத்து, இவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மேலும், சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்