பிரபுதேவா மாஸ்டருடனான ஸ்வீட் மெம்மரீஸ்.! ராகவா லாரன்ஸின் வைரல் புகைப்படம்.!
ராகவா லாரன்ஸ், நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து, தற்போது அது வைரலாகி வருகிறது.
ஆரம்பக் காலகட்டத்தில் குரூப் டேன்சராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், பல படங்களில் நடன கலைஞராக பணியாற்றி, அதன் பின்னர் தனது முயற்சியாலும் மற்றும் கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார்.நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த மனித நேயமுள்ள மனிதராகவும் விளங்குபவர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் .அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள இந்தப் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்திய சினிமாவின் பிரபல நடன கலைஞரும், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவாவுடன் ராகவா லாரன்ஸின் ஆரம்ப காலத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபுதேவா அவர்கள் இணைந்துள்ள அந்த புகைப்படத்துடன் பிரபுதேவா மாஸ்டருடனான ஸ்வீட் மெம்மரீஸ் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Sweet memories with prabudeva master!! pic.twitter.com/kSvswz8avf
— Raghava Lawrence (@offl_Lawrence) July 12, 2020