இஸ்ரேலுக்காக உளவு பார்க்க வந்த குற்றச்சாட்டில் ஸ்வீடனை சேர்ந்த ஈரானியருக்கு மே 21 -க்குள் தூக்கு தண்டனை …!
பேரிடர் மருத்துவரும், ஆராய்ச்சியாளருமாகிய அஹ்மத்ரேசா ஜலாலி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது படிப்பு சம்பந்தமாக ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது இஸ்ரேலுக்காக உளவு பார்க்க வந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர் சுவீடனை சேர்ந்த ஈரானியர். எனவே, ஸ்வீடன் ஐரோப்பிய ஒன்றியம் அஹ்மத்ரேசா ஜலாலிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரை விடுவிக்க வேண்டுமென ஈரானிய பிரதிநிதிகளிடம் கூறி வருவதாக ஸ்வீடன் வெளியுறவு துறை மந்திரி ஆன் லிண்டே தெரிவித்துள்ளார்.