மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் சுவாதி.!

Default Image

திருமணத்திற்கு பின் தற்போது நடிகை சுவாதி ரெட்டி மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுவாதி ரெட்டி .அதில் இடம் பெறும் கண்கள் இரண்டாய் பாடல் அனைவரையும் கவர்ந்தது.அதனையடுத்து வடகறி உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் . அதனையடுத்து 2018-ல் பைலட்டான விகாஸ் வாசுவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி இந்தோனேசியாவில் கணவருடன் செட்டிலாகி விட்டார் .

சமீபத்தில் இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிய போவதாக கூறப்பட்டது.ஆனால் அதனை சுவாதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது இவர் தனது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் , ஏற்கனவே ஒரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh
jos buttler
ragupathy dmk thiruparankundram
Subman Gill - Abhishek sharma
Australian - Pat Cummins