சோதனை ஓட்டத்தில் சிக்கிய சுசூகி சியாஸ்.. இதுதான் மாற்றம்..!
மாருதி சுசுகியின் பிஎஸ்-6 தரத்தில் வெளிவர உள்ள சியாஸ் கார், சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தது. மேலும் இது அடைப்பு எதுவும் இன்றி சோதனை ஓட்டத்தில் இருந்ததால், எந்த ஒரு பாகத்தையும் அந்நிறுவனம் இதில் மாற்றவில்லை.
இந்த காரில், பலேனோ காரின் சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது என தெரிகிறது. மேலும், இந்த காரில் 1.2 லிட்டர் ட்யூல் ஜெட் இன்ஜினை வழங்கியிருக்கிறது. இந்த இன்ஜின் 89 பிஎச்பி பவரையும், 115 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த காரில் வரும் பெட்ரோல் இன்ஜின், டர்போசார்ஜரை கொண்டிருந்தால், இதற்கு இணையான மற்ற கார்களுடன் இது போட்டி போடமுடியும்.
காரின் டிசைன் என்னைப் பொறுத்தளவில் முன்புறத்தில் சற்று மாற்றத்தை அறியலாம். மேலும் இந்த ரக கார்களில் பலெனோவின் அலாய்களை கொண்டிருப்பதால், இதனின் லுக் பார்க்க ஹோண்டா அமேஸ்ஐபோல் உள்ளது.
மாருதி நிறுவனம் சியாஸ் மாடலில் 2018 ஆகஸ்ட் மாதத்தில் 1.5 லிட்டர் கே15பி நான்கு-சிலிண்டர் அமைப்பை கொண்ட எஸ்எச்விஎஸ் பெட்ரோல் என்ஜினை பொருத்தியிருந்தது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் 104.7 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.