மரணத்தில் சந்தேகம் – கண்ணீருடன் தெரிவித்த சித்ராவின் தாய் .!

மறைந்த சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமான சித்ரா தனது சீரியலின் படப்பிடிப்பிற்காக கணவர் ஹேமந்த் உடன் சென்னை அருகிலுள்ள நாசரேத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் .
இந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய படி சித்ராவின் சடலம் மீட்கப்பட்டது . சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சித்ராவின் கன்னத்தில் ரத்தம் காயம் இருந்ததும் ,கழுத்தின் மேற்பகுதியிலும் ரத்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இது போலீசார் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது தாயார் கூறியதாவது ,எனது மகள் மிகவும் வலிமையான மனநிலை உடையவர் . அப்படிப்பட்ட அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை .எனவே தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .எனவே போலீசார் சித்ராவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற பல கோணங்களில் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025